பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஒரு சூப்பர் செய்தி

by Column Editor

விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் இப்போது ஹிட் வரிசையில் உள்ளன. ஒவ்வொரு சீரியலும் மக்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது, TRPயும் எல்லா தொடர்களுக்கும் அதிகமாகி வருகின்றன.

அதிலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு குடும்ப தலைவிகள் அதிகம் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். காரணம் அவர்கள் வீட்டில் படும் கஷ்டங்களை இந்த தொடர் அதிகமாக பேசுவதால் தான்.

தொடரில் கோபி என்ற வேடத்தில் நடிப்பவர் தனது மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றொருவருடன் வாழ நினைக்கிறார், இதை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டு வந்தார்.

ஆனால் அவரது அப்பாவிற்கு தெரியவர பெரிய பிரச்சனை இருவருக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தான் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது. அதாவது இந்த தொடர் வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி 3 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

Related Posts

Leave a Comment