உலக மஹா நடிப்புடா சாமி.. ஓட்டை மாற்றி போட்ட கறுப்பாடு இவரா?

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக நடந்த அரசியல் மாநாடு டாஸ்கில், இமான் அண்ணாசியின் அணி வெற்றிபெற்ற நிலையில், அண்ணாச்சிக்கு விழ வேண்டிய ஓட்டை மாற்றி போட்டது யார்? என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை, ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களுக்கு மிகவும் வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ளதால்… டாஸ்குகளும் கடுமையாகிக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் ‘அரசியல் மாநாடு’ டாஸ்கில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் எந்த அளவிற்கு முட்டி மோதினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த டாஸ்கில்… இமான் அண்ணாச்சியின் நியாயத்தைப் பேசும் மக்கள் கட்சியும், சிபியின் மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சி தனித்து போட்டியிட்டது. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையில் இமான் அண்ணாச்சி மற்றும் சிபி இணைந்த கூட்டணிக்கு 7 வாக்குகளும் பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சிக்கு 5 வாக்குகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இமான் அண்ணாச்சியின் அணிக்கு 8 வாக்குகள் கிடைக்க வேண்டிய நிலையில்… யாரோ ஒருவர் ஒரு ஓட்டை ப்ரியங்காவுக்கு போட்டிருந்தார். அவர் யார் என்கிற குழப்பம் போட்டியாளர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் தற்போது நெற்றி கமல் முன் இதற்க்கு பதில் கிடைத்துள்ளது.

கமல் முன்பு நான் தான் அந்த ஓட்டை மாற்றி போட்டேன் என ஒப்புக்கொண்டார் நிரூப். இதுகுறித்து அவர் கூறுகையில் அவரது அணியில் நியாயம் இருந்தது. அவர்கள் தான் முதலில் எங்கள் அணியில் சேர நினைத்தனர் ஆனால் அது முடியாமல் போகவே தனித்து நின்று போட்டியிட்டார் என கூறினார்.

இவர் சொல்கிற காரணம் எல்லாம் ஓகே தான் ஆனால் ராஜு… ஓட்டை மாற்றி போட்ட அந்த கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க உலக உருண்டையை கையில் வைத்து கொண்டு சத்தியம் வாங்கிய போது, நிரூப் சத்தியம் செய்தது தான் கொஞ்சம் ஓவர் என பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment