மனச்சாட்சியை கொன்னுட்டு வாழமுடியாது – இசைவாணியிடம் வாக்குவாதம் செய்யும் தாமரை

by Column Editor

மனச்சாட்சியை கொன்னுவிட்டு என்னால் வாழமுடியாது என்று இசைவாணியிடம் தாமரைச்செல்வி வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க்கில் இசைவாணியும், தாமரையும் விளையாடினர். அப்போது இசைவாணியின் கண்ணாடியாக தாமரைச்செல்வி பிரதிப்பலித்து பேசினார். அதில், இசைவாணி குறித்து தனது மனதில் இருக்கும் கசப்பான விஷயங்களை கூறினார். இறுதியாக பேசும், தாமரை கண்ணங்கள் என்று பாட்டு பாடி நக்கலடிக்கும் காட்சிகள் காட்டப்பட்டது.

இது குறித்து தாமரைச்செல்வியும், இசைவாணியும் காரசாரமாக விவாதம் செய்யும் ப்ரோமோதான் வெளியாகியுள்ளது. அதில் ‘ஹேய் வாயை மூடு. நான் அந்த புள்ளயை பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என்று தாமரை சொல்ல, அதற்கு பெரிய இதுவாட்டும் உட்கார்ந்து இருங்க’ என்று இசைவாணி பேசினார். மேலும் பேசும் இசைவாணி, மனசாட்சியோடு சொல்லு, நீ நக்கலா பாட்டு பாடுனாயா அல்லது உன் சந்தோஷத்தத்திற்காக பாட்டு பாடுனாயா என்று தாமரைச்செல்வியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளிக்கும் தாமரை, அந்த பாட்டை என் சந்தோஷத்திற்காக பாடினேன். உன்னை பற்றி பேச வேறு எதுவும் இல்லை என்று கூற, அது பார்க்கும் மக்களுக்கு தெரியும் என்கிறார் இசைவாணி. இதற்கு பதிலளிக்கும் தாமரை, என்னை மட்டும் மக்கள் பார்க்கவில்லை. உன்னையும்தான் பார்த்துவிட்டு இருக்கிறாங்க‌. நீ என்ன செய்யுற என்று பார்த்துகிட்டுதான் இருக்காங்க. என்னை நிறைய முறை கஷ்டப்படுத்தியிருக்க. நானும் எத்தனை நாள் பொறுமையாக போகமுடியும் என்று இசைவாணியிடம் தன் கோபத்தை தாமரை காட்டுகிறார்.

Related Posts

Leave a Comment