பாரதி கண்ணம்மா ரோஷ்ணி வெளியேற இது தான் காரணமோ

by Column Editor

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதும் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த தொடர் இவ்வளவு பெரிய ரீச் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்ரியன் தான்.

அவர் ஒரு மாதத்திற்க்கு முன்பு சீரியலில் இருந்து வெளியேறினார். அவர் திரைப்படங்களில் நடிக்க போகிறார் அதனால் தான் பாரதி கண்ணம்மாவில் இருந்து வெளியே போகிறார் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து வினுஷா தேவி என்ற புதுமுக நடிகை கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

இதுவரை பிரிந்து வாழ்ந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கோர்ட் தீர்ப்பு காரணமாக ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து வசித்து வருவது போல தற்போது ஒரு வாரமாக காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பாரதி – கண்ணம்மா இடையே ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் அவர்கள் திருமணமான புதிதில் நடந்த விஷயங்களை நினைவு கொள்வது போல காட்டப்பட்டு வருகிறது.

அதிலும் அவர்கள் ரொமான்ஸ் தான் அதிகம் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் முத்த காட்சி எல்லாம் வந்தது என்பது ஹைலைட். இப்படி ரொமான்ஸ் காட்சி, முத்த காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் கண்ணம்மா ரோலில் நடிக்க முடியாது என ரோஷ்ணி விலகிவிட்டார் போல என நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment