முத்துபாண்டிக்கு கெடு விதிக்கும் ஷண்முகம்… பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீட்டுக்கு திரும்பி வர ஷண்முகம் சத்தியம் வாங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சண்முகம் பைக் நேராக செளந்தரபாண்டி வீட்டில் வந்து நிற்கிறது. இங்க எதுக்குடா வந்த என்கிறாள் பரணி. அத்தை கிட்ட ஒரு தகவல் சொல்லிட்டு போகனும் என்கிறான் சண்முகம். உள்ளே செல்கின்றனர்.

பிறகு சண்முத்தை பார்த்ததும் செளந்தரபாண்டியன், முத்துபாண்டி, சனியன் மற்றும் பாண்டியம்மாள் மிரளுகின்றனர். அத்தே உன் மகன் உயிரோட இருக்கனுன்னா ஒரு வாய்ப்பு தரேன், கவிதா சாவுக்கு நான் தான் காரணன்னு போலீஸ்ல சரண்டர் ஆகச்சொல்லு இல்லே நான் உயிருக்கு உத்திரவாதம் குடுக்க முடியாது என்று சொல்லிவிட்டு செல்கிறான். பிறகு பாண்டியம்மாளிடம் வந்து எல்லாத்துக்கும் காரணம் நீதான்னு தெரியும் நீயும் சரண்டர் ஆயிடு இல்லே சதையை சந்து சந்தா வெட்டுவேன் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.

பிறகு என்ன பண்ண போற என்கிறாள் பாண்டியம்மாள். ஒரு யோசனை இருக்கு என்கிறார் செளந்தரபாண்டி. அப்பற கேஸ் நிக்காது, கவிதா குடும்பத்த மிரட்டிட்டே என்கிறான் முத்துபாண்டி. கவிதா குடும்பம் பயப்படும் சண்முகம் பயப்படுவானா என்கிறாள் பாண்டியம்மாள். அவனுக்கு பயமே இல்லை. பயம் அவன் ரத்தத்திலயே இல்ல என்கிறார் செளந்தரபாண்டி. என்னதா முடிவு என்கிறாள் பாண்டியம்மாள். இப்போதைக்கு உயிர் தப்பிக்கனும் பிறகு தான் எல்லாமே அதுக்கு ஒரே வழி பஞ்சாயத்த கூட்டி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு இசக்கிகூட வாழ போறேன்னு சொல்ல வேண்டியது தான் என்று செளந்தரபாண்டி சொல்ல, முத்துபாண்டிக்கு கோபம் வருகிறது.

பாண்டியம்மா அவன் சொல்றதுதா சரி, நீ வாழ வேண்டாம், குடுக்குற இம்சையில அவளே ஓடிப்போவா, இல்ல தீத்துகட்டிட்டு ஆத்தா மாதிரி இவளும் ஓடிட்டான்னு சொல்லி கதைய முடிச்சிட்டு, ரத்னாவுக்கு தாலி கட்டு என்று பாண்டியம்மாள் சொல்ல, முத்துபாண்டி சம்மதிக்கிறான்.

விடிகாலை ஊர் பெரிய மனிதர்கள் இருவர் வருகின்றனர். சண்முகத்திடம் முன்னாள் தலைவர் செளந்தரபாண்டியன் பஞ்சாயத்து கூட்டி இருப்பதாக சொல்ல, எதுக்கு பஞ்சாயத்து வர முடியாதுன்னு சொல்லுங்க என்கிறான் சண்முகம். நீங்க அப்படி சொல்லக்கூடாது. நீங்கதா புரசிடெண்ட், இப்படியே இழுத்துக்கிட்டு போனா நல்லா இல்லயே பேசி முடிச்சு விட்டா தானே நல்லது என்று சொல்கின்றனர். பரணி பஞ்சாயத்து ஏற்பாடு செய்யும்படி சொல்கிறாள். வரும்போது இசக்கியையும் அழைச்சிட்டு வாங்க என்று சொல்லி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment