சன் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோயின்ஸ்..

by Lifestyle Editor

சன் டிவியில் இளம் ரசிகர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவரையும் கவரும் விதத்தில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி ஒளிபரப்பாகும் சீரியல்கள் TRP பட்டியலிலும் இடம்பிடிக்க தவறுவது இல்லை. சரி, தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோயின்ஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சுந்தரி சீரியல் நாயகி கேப்ரியல்லா செலஸ் தான். ‘சுந்தரி’ சீரியலின் முதல் சீசனில் நடிக்கும் போது ரூ.20,000 ஒரு எபிசோடுக்கு வாங்கி வந்த இவர், இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பின் காரணமாக இரண்டாவது சீசனில் ஒரு எபிசோடுக்கு ரூ.40,000 பெறுவதாக கூறப்படுகிறது. ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள கேப்ரியல்லா… டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தொடர்ந்து, கயல் சீரியலில் நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டி… ஒரு எபிசோடில் நடிக்க சுமார் 25,000 வாங்கி வருகிறாராம். ஆரம்பத்தில் தெலுங்கு சீரியலில் நடித்து வந்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா பவானி ஷங்கர் விலகிய பின்னர் நடித்தார். இதை தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ தொடரில் வில்லியாக நடித்தார். இதன் பின்னரே ‘கயல்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் இவர் எதிர்பாராத அளவுக்கு பல ரசிகர்களை சைத்ரா ரெட்டிக்கு பெற்று தந்தது.

இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளவர், நடிகை ஆல்யா மானசா. இவர் ஒரு எபிசோடுக்கு… ரூ.20,000 வாங்குவதாக கூறப்படுகிறது. டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆல்யா.. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரில் நடித்தார். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் ஆல்யா… அதிரடியாக விஜய் டிவியில் இருந்து தாவி சன் டிவியில் கரை சேர்ந்துள்ளார். ஆல்யா தற்போது ‘இனியா’ என்கிற தொடரில் நடித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் உள்ளவர் ‘எதிர்நீச்சல்’ தொடரில் நடித்து வரும் மதுமிதா தான். இவர் ஒரு எபிசோடுக்கு ரூ.18,000 வாங்குவதாக கூறப்படுகிறது. இவர் கன்னட சீரியலில் அறிமுகமாகி தற்போது, சன் டிவி தொடர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் என்றால் சந்தேகமில்லை.

5-ஆவது இடத்தில் மூன்று நடிகைகள் உள்ளனர். அதாவது சிங்கப்பெண்ணே சீரியலில் நடித்து வரும் மனீஷா மகேஷ், வானத்தை போல மான்யா, ஆகிய இருவருமே ஒரு எபிசோடுக்கு சுமார் 15,000 வீதம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த இரு சீரியலும் TRP ரேட்டிங்கிலும் சக்க போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment