உருளைக்கிழங்கு மசியல்..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – சிறிதளவு

இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து ஆறியதும் அதன் தோலை உரித்து கொள்ளுங்கள்.

பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு கொள்ளுங்கள்.

கடுகு பொரிந்து உளுத்தம்பருப்பு சிவந்ததும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறி அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 6 கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் அதில் 1 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கிளறி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

உருளைக்கிழங்கு நன்றாக வெந்து ஓரளவிற்கு மசிந்தவுடன் கடைசியாக சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறவிடவும்.

சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்தல் சுவையான உருளைக்கிழங்கு மசியல் பரிமாற்ற தயாராக இருக்கும்.

Related Posts

Leave a Comment