டீக்கடை ஸ்டைலில் சுவையான பஜ்ஜி..

by Editor News

தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 4,

கடலை மாவு – 300 கிராம்,

அரிசி மாவு – 4 ஸ்பூன்,

மிளகாய் வத்தல் பொடி – 6 ஸ்பூன்,

சீரகப் பொடி – 3 ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

சிவப்பு கலர் பொடி (நீங்கள் விருப்பப்பட்டால்) – 0.5 ஸ்பூன்,

சோடா உப்பு – 1 டீஸ்பூன்,

பெருங்காயப் பொடி – 1 ஸ்பூன்,

செய்முறை

முதலில் எடுத்துக்கொண்ட வாழைக்காயின் இருபக்க காம்புகளை நீக்கிவிட்டு, மேல் தோலை லேசாக சீவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் வாழைக்காய் பஜ்ஜிக்கான இழைப்பானில் நீளவாக்கில் அதனை சீவி வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் எடுத்துக்கொண்ட கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, சீரகப்பொடி, உப்பு, சிவப்பு நிறமி, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

இதனை நன்கு ஒருசேர கலந்து, தேவையான அளவு நீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும். கரைத்துக்கொண்ட மாவை எடுத்து சூடான எண்ணெயில் சீவிவைத்த வாழைக்காயை இருபுறமும் கரைத்த மாவு நன்கு படும்வகையில் சேர்க்க வேண்டும்.

நன்கு பொன்னிறமாக வந்ததும் வாழைக்காயை வெளியே எடுத்தால், சுவையான பஜ்ஜி தயார். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது கூடுதல் சுவை மற்றும் மகிழ்ச்சியை வழங்கும்.

Related Posts

Leave a Comment