டூத் பேஸ்ட்ட வாங்கும் போது இந்த நிறங்கள கவனிச்சிருக்கீங்களா.? அதற்கான காரணங்கள் இதுதான்….

by Editor News

ஒவ்வொரு நாளும் நாம் பலவிதமான ப்ரோடக்ட்களை பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு பொருளிலும் அதன் உள்ளடக்கம், பயன்பாடு, குணங்கள் சார்ந்த பலவிதமான குறியீடுகள் இருக்கின்றன. அதில் பெரும்பாலானவற்றை நாம் அறிந்திருப்பதில்லை. அப்படியான ஒரு குறியீட்டை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

ஒரு நாளை எல்லோருமே பொதுவாக பேஸ்ட் வைத்து தான் தொடங்குவோம். பல்லை துலக்கும்போது பிரஷ் எடுத்து அதில் பேஸ்ட் அழுத்தி வைத்து தேய்க்கும்போது என்றாவது அந்த பேஸ்ட் பட்டையில் இருக்கும் நிறங்களை கவனித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் இப்பொது எடுத்து பாருங்கள். அதன் அர்த்தத்தை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

பற்பசைக் குழாயின் பின்புறத்தில் இருக்கும் இந்த அடையாளங்கள் அவற்றின் சொந்த அர்த்தத்தைக் கொண்டுள்ளன. நீங்கள் கவனித்திருந்தால், சில நேரங்களில் கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் நீல நிற அடையாளங்கள் இருப்பதைக் காணலாம். அதற்கு பல அர்த்தங்கள் உண்டு. பேஸ்ட்டை வாங்கும் முன் நிறத்தை சரி பார்க்காமல் இருந்தால், பற்கள் வலுவடைவதற்கு பதிலாக சேதமடையலாம். சரி வண்ணங்களின் அர்த்தங்களுக்கு வருவோம்.

உங்கள் டூத்பேஸ்ட் பட்டையில் கருப்பு நிறம் இருந்தால், இந்த பேஸ்ட் நிறைய ரசாயனங்களால் ஆனது என்று அர்த்தம். அத்தகைய பேஸ்ட் வாங்குவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். அதே உங்கள் பேஸ்ட்டில் சிவப்பு குறி இருந்தால் இந்த பேஸ்ட் கவ்கவையால் உருவாக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது இயற்கையான பொருட்கள் இதில் காணப்படுகின்றன ஆனால் அதனுடன் பல வகையான இரசாயனங்களும் உள்ளன.

நீல நிறம் என்றால் இந்த பேஸ்ட்டில் இயற்கை பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளன என்று பொருள். நீங்கள் பாதுகாப்பான பேஸ்ட்டை வாங்க விரும்பினால், பச்சை நிறத்தில் குறிக்கப்பட்ட பேஸ்டை வாங்கவும். இதன் பொருள் உங்கள் பேஸ்ட் பாதுகாப்பானது. இதில் இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.

Related Posts

Leave a Comment