கொரோனா வைரஸ் கொல்லும் சூப்பர் சூயிங்கம் – அசத்திய அமெரிக்க விஞ்ஞானிகள்

by Column Editor

கொரொன வைரஸ் உலகமெங்கும் ஆட்டிப்படைக்கும் நேரத்தில், புது வகையான ஓமிக்ரோன் வைரஸும் பரவிக்கொண்டு இருக்கிறது.

மேலும், கொரோனா வைரஸை அழிக்க தடுப்பூசி என பல வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் வைரஸை அழிக்க சூயிங்கம்’மை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க ஆய்வு தலைமை அதிகாரி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் ஆனது ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர்களிடம் இருந்து பரவுகிறது.

இதனால், உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரசை எங்கள் சூயிங்கம் கொல்லும். இதன்மூலம், கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படுவதுடன், அதன் பரவலும் தடுக்கப்படும் என்று கூறுகிறார்.

இதற்காக, தாவரத்தில் இருந்து பெறப்படும் ‘ஏசிஇ2’ என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதை பரிசோதித்தபோது நல்ல பலனை கொடுத்திருக்கிறது. இந்த ஆய்வுகள் நல்ல பலனைக்கொடுத்தால் சூப்பர் சூயிங்கம் வைத்தே கொரோனா வைரஸை கொன்றுவிடமுடியுமாம்.

Related Posts

Leave a Comment