902
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க்கை பிக்பாஸ் கொடுத்தார். அந்த டாஸ்க்கில் அமீர் வெற்றி பெற்றார். ஆனால், பாவனி ரெட்டி தனது காயினை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் தலைவரானார்.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், அமீர் பாவனியிடம் கொஞ்சி பேசுவது போல் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது.
அமீர் பாவனியிடம் கொஞ்சி பேசும்போது, பிரியங்கா பவானி உங்க crushஆ என்று கேட்க, ஆமாங்க என்று அமீர் கூற பாவனி வெட்கத்தில் சிரிக்கிறார். இதனால், பாவனிக்கும், அமீருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதா என்று இந்த ப்ரொமோவை பார்க்கும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.