வேற வேலையில்லையா எனக்கு – ராஜுவிடம் கொந்தளித்த பாவனி

by Column Editor

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனிக்கும், ராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ராப் பாடகி ஐக்கி பெர்ரி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’போராடி தோக்குறது வேற, ஒண்ணுமே பண்ணாம தோக்குற்து வேற’ என அமீர் கூற, ’ஒவ்வொருவாட்டியும் கேள்வி கேக்கும் போது, எனக்கு சரியான பதில் வரல’ என்கிறார் பாவனி. இதையடுத்து, பாவனிக்கும், ராஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் பாவனியிடம் ராஜு சாரி கேட்க, ‘எப்போ பாத்தாலும், சண்ட சண்ட சண்ட… என்ன வேற வேலையில்லையா எனக்கு’ என்கிறார் பாவனி.

Related Posts

Leave a Comment