மீண்டும் உயரும் கொரோனா தொற்று : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

by Column Editor

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,954 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 8,309 ஆகவும், நேற்று 6,990 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 190 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இன்று கொரோனா பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,69,227 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் கொரோனாவிலிருந்து 10,207 பேர் குணமாகியுள்ள நிலையில், இதன் மூலம் கொரோனாவால் குணமானோர் மொத்த எண்ணிக்கை 3,40,028,506 ஆக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,023 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை1,24,10,86,850 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment