இன்று முதல் தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு!

by Column Editor

தீப்பெட்டி விற்பனை விலையானது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மாற்றம் இல்லாமல் ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வந்தது. தற்போது அதன் மூலப் பொருட்களின் விலை ,மின்சார கட்டணம் ,லாரி வாடகை உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்தது.

அதன்படி அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 50 குச்சுகள் கொண்ட தீப்பெட்டியை ரூபாய் 2க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் விலை உயர்வு அமலாகியுள்ளது.

தீப்பெட்டி ஆனது கடந்த 1955 ஆம் ஆண்டு 50 பைசாவும், 2007ஆம் ஆண்டு ஒரு ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு பொட்டாசியம் குளோரேட் ரூ.63-ல் இருந்து ரூ.78 ஆகவும், சல்பர் ரூ.24லிருந்து ரூ.31 ஆகவும், மெழுகு ரூ.58லிருந்து ரூ.80ஆகவும், சிவப்பு பாஸ்பரஸ் ரூ.425-லிருந்து ரூ.810 ஆகவும் விலை உயர்ந்ததன் காரணமாகவே தீப்பெட்டியின் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment