8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றம் : 200 துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில்

by Lifestyle Editor

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரச்சாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான பிரச்சாரங்கள் பரபரப்பாக நடைபெற்றுக்ககொண்டிருக்க , 39 தொகுதிகளில் , பதற்றமான வாக்குச்சாவடிகள் எத்தனை இருக்கின்றன என்பத பற்றி ஆய்வு நடத்தப்படடுள்ளது.

இதில் மொத்தம் உள்ள 68,320 வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டு உள்ளது. 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னையிலும் 3 நாடாளுமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை எவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னையில் 456 சாவடிகளும், வடசென்னையில் 254 சாவடிகளும், மத்திய சென்னையில் 192 சாவடிகளும் பதற்றமானவை என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னையில் மட்டும் 982 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.

பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளிலும் தேர்தலின் போது துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு முதல் நாளான 18ஆம் திகதி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த பணிகள் அடுத்த வார இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குச்சாவடி மையத்தை முழுமையாக கண்காணிக்கும் வகையில வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் இடங்கள், வாக்குப்பதிவு நடைபெறும் இடம் ஆகியவை தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. துணை ராணுவ படையினருடன், உள்ளூர் பொலிசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இப்படி பதற்றமான சாவடிகள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment