குஜராத்தில் 152 தொகுதிகளில் பாஜக முன்னிலை – தொண்டர்கள் கொண்டாட்டம் ..

by Lifestyle Editor

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 152 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, அக்கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த ஒன்றாம் தேதி மற்றும் ஐந்தாம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 92 இடங்களில் வெற்றி பெற்றால் பெரும்பான்மைக்கு போதுமானதாகும். ஆனால் பாஜக தற்போது 152 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை அசுர பலத்துடன் முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும், மேள தாளங்களை இசைத்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

கடும் போட்டியளிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த முறை 77 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதேபோல் ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment