வாக்காளர் பட்டியல் திருத்தம் – இன்று கடைசி நாள் ..

by Lifestyle Editor

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாம்களில் இந்த பணிகள் நடந்தன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் போன்ற பணிகளுக்காக கடந்த ஒன்னாம் தேதி வரை 18 லட்சத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க பணி இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் நீக்கவும் உடனடியாக மனு அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. விண்ணப்பங்களை விரைவில் பரிசீலனை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஜனவரி 3ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி அஞ்சாம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கிறது.

Related Posts

Leave a Comment