பெங்களூரு விமான நிலையத்தில் 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று!!

by Lifestyle Editor

பெங்களூரு விமான நிலையத்தில் 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பரவல் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவில் கொரோனா பரவலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சீனா மற்றும் பிற நாடுகளில் கொரோனா கவலைகளுக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 16 பேருக்கு பரவக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து பெங்களூர் வந்த 3 பயணிகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இரவு அபுதாபி, ஹாங்காங் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய 3 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களிடம் எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைக்கு பிறகு எந்த வகையானகொரோனா தொற்று என்பது உறுதி செய்யப்படும்.

Related Posts

Leave a Comment