ஞானவாவி மசூதி- இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி

by Lifestyle Editor

உத்தரபிரதேசம் மாநிலம் ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதி அடிபாகத்தில் உள்ள இடத்தில் இந்து பிரிவினர் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் எனவும், பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் செய்து தர உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்த ஏழு நாட்களுக்குள் பூஜைகள் நடத்தப்படும் என இந்து பிரிவு அறிவித்துள்ளது.

காசி விசுவநாதர் கோயில் அறக்கட்டளைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஞானவாபி மசூதி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment