நான் உங்க வீட்டுப் பிள்ளை – கோல்டன் மைக் டாஸ்க்கில் ராஜு உருக்கம்

by Column Editor

பிக் பாஸ் தனக்கு வாழ்க்கையாக மாறப்போவதாகவும், உங்கள் வீட்டுப் பிள்ளை நான் என்றும் உருக்கமாக ராஜு பேசியுள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர். சஞ்சீவ் வெளியேறிய நிலையில், அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வானார்.

இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 5 முடியப்போகிறது. எதிர்பாராத விதமாக நேற்றைய நிகழ்ச்சியில், தாமரைச்செல்விவெளியேறினார். இறுதி வார போட்டியாளர்களாக, அமீர், நிரூப், ராஜு, பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் களத்தில் உள்ளனர். ஏற்கனவே, நிரூப்பை இரண்டாவது நேரடி ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்தது பற்றி கடும் அதிருப்தி தெரிவித்து வந்த பார்வையாளர்கள், நேற்று தாமரைச் செல்வி எலிமினேட் செய்ததையும் விமர்சித்து வருகின்றனர். தகுதியானவர்கள் எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு, தகுதியே இல்லாதவர்கள் ஃபைனலிஸ்ட்டாக இருக்கின்றனர் என்ற ரீதியில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று வெளியான முதல் புரோமோவில், ‘கோல்டன் மைக்’ என்று பார்வையாளர்களிடம் பேசி, தங்களை வெற்றியாளராகத் தேர்வு செய்ய வைக்கும் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. மக்களின் மனதை தங்கள் பக்கம் ஈர்க்கும் படி பேசும் டாஸ்க் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில், கோல்டன் மைக் டாஸ்க்கில் ராஜு பார்வையாளர்களிடம் பேசும் காட்சிகள் உள்ளன. அதில் பிக் பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதாகவும், அதுவே தனக்கு வாழ்க்கையாக மாறப்போவதாகவும், உங்கள் வீட்டுப் பிள்ளை நான் என்றும் உருக்கமாக ராஜு பேசியுள்ளார்.

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும் போது, மற்றவர்களை சிரிக்க வைக்கும் போது மகிழ்ச்சியாக உணர்வோம். அதே போல தான் நானும் இந்த வீட்டில் மற்றவர்களுடன் இருந்திருக்கிறேன் என்று ராஜு கூறிய காட்சிகள் உள்ளன.

“இந்த வீட்டுக்கு வர்ற எல்லாருக்குமே ஃபேமஸ் ஆகணும் அப்படின்றது ஒரு ஆசையா இருக்கும். இந்த வாய்ப்ப நான் சரியா பயன்படுத்தினதுனால தான் இது எனக்கு ஒரு வாழ்க்கையா மாறப் போகுதுன்னு நான் நம்பறேன். மத்தவங்க சந்தோஷமாக இருக்கறது, சிரிக்கறது எல்லாம் நமக்கும் ஜாலி. இந்த மாதிரி ஒரு பையன் நம்ம வீட்ல இருந்தா நல்ல இருக்கும், இப்படி ஒரு அண்ணன் இல்ல தம்பி அப்படின்னு உங்க யார் மனசுலையாவது இடம் பிடிச்சிருந்தா, அதுவே எனக்கு பெரிய சந்தோசம்” என்று உருக்கமாக ராஜு பேசும் காட்சிகள் இரண்டாவது புரோமோவில் வெளியாகி உள்ளன.

Related Posts

Leave a Comment