பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்களா? முதன் முறையாக நமீதா கூறிய அதிர்ச்சி பதில்!

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 வாரங்களை எட்டியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் சுருதி வெளியேறி இருந்தார்.

இதனையடுத்து இரண்டாவது வாரத்தில் வெளியேறி இருந்த நமீதா முதல்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடியுள்ளார்.

ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள தாமரை ஒரு அப்பாவியா? என கேட்டுள்ளனர்.
அதற்கு நமீதா, அவர் அப்பாவியான என்பது தனக்கு தெரியாது என்றும், ஆனால் பிக்பாஸ் விளையாட்டை திறம்பட விளையாடும் அளவிற்கு அவர் வலுவாக இல்லை என்பது தன்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு சிபி அல்லது இசைவாணி ஆகியோர் வெற்றியாளர்களாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரசிகர்கள் பலரும் ராஜு அல்லது பிரியங்கா வெற்றியாளர்களாக இருக்க வாய்ப்புண்டு என்று கணித்துள்ளனர்.

இதனிடையே, ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே நீங்கள் வெளியேறியதால் வயல்காட்டு மூலம் உள்ளே போக வாய்ப்பு உள்ளதா?

என கேட்டதற்கு, உள்ளே போகலாம்… போகாமலும் இருக்கலாம்… என தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதில்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment