உன் வாய்ல பீடிங் பாட்டில் வைச்சுருக்கியா ? நிரூப்பிடம் சவால் விடும் பிரியங்கா !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போ என்றால் போய்கிட்டே இருப்பேன் என்று நிரூப்பிடம் பிரியங்கா சவால் விடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோவில் தன்னை கலாய்த்ததாக பிரியங்கா மீது நிரூப் குற்றச்சாட்டுகிறார். அதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, உன்னிடம் அப்படி பேசினது பிடிக்கவில்லை என்னிடம் சொல்லவேண்டியது தானே அதை விட்டுவிட்டு அதற்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாய். இதையடுத்து பிக்பாஸிடம் குறும்படம் கேட்கும் பிரியங்கா, அதை பார்த்தால் உண்மை புரியும் என்கிறார். இதனால் இருவருக்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதையடுத்து இரண்டாவது ப்ரோமோவிலும் இந்த சண்டை தொடர்கிறது. அதில் ஆரம்பத்தில் இருந்து நீதான் தூக்கி பிடித்துக்கொண்டு இருக்கிறாய். நீதான் அவனை பாதுகாத்து, அடைகாத்து ஒரு கூட்டில் வைத்திருக்கிறாய். தப்பு பண்ணா சொல்லி கொடுக்கனும். கேவலமா பண்ணா சொல்லி கொடுக்கமுடியாது. அதனால்தான் எல்லாத்தையும் பண்ணிவிட்டு கிழித்துவிடுகிறீர்கள். நான் எதுவும் சொல்லக்கூடாதுல என்று நிரூப் கேட்க, நீ என்ன வாயில் பீடிங் பாட்டிலா வைத்திருங்களா என பிரியங்கா கேட்கிறார்.

சனிக்கிழமை அன்று குறும்படம் போடுவாங்க பாரு. அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அது உனக்கு தெரியுமா ?. பிக்பாஸ் வீட்டில் இருந்து போ என்று சொன்னால் கிளம்பி போய் விடுவேன். அதற்கு நிரூப்பே, அப்படி சொன்னால் கிளம்பி போடி என்கிறார். இந்த காட்சிகளால் இன்றைய எபிசோடு பிரியங்கா மற்றும் நிரூப் சண்டைகளால் நிரப்பி இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் இன்றைய எபிசோடை காண பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment