ப்ரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் சரியாக செயல்படாத நபர்கள் ?… நிரூப்புக்கு தண்டனை வழங்கிய பிக்பாஸ் !

by Column Editor

ப்ரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் சரியாக செயல்பாடாத நபர்களுக்கு தண்டனை வழங்கிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் ப்ரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த டாஸ்க்கில் விளையாடும்போது போட்டியாளர்களிடையே காரசாரமான சண்டைகள் நடைபெற்று வந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நிரூப், பிரியங்கா, தாமரைச்செல்வி ஆகியோரை சுற்றியே டாஸ்க் நகர்ந்து வந்தது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ப்ரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் சரியாக செயல்படாத நபர்கள் யார் என்பதை பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதலில் பேசும் அபிஷேக், நிரூப், அமீரும் சரியாக செயல்படவில்லை என்கிறார். இதையடுத்து பேசும் சிபி, வருண், பிரியங்கா, அபினய் ஆகியோர் நிரூப்பின் பெயரையே சொல்கின்றனர். இதைத்தொடர்ந்து இமான் அண்ணாச்சி, அக்ஷராவும் பாவனியின் பெயரை சொல்லுகின்றனர்.

இதனால் கோபமாகும் நிரூப், எதாவது சொல்லியாகணும், அதனால் என் பெயர் சொல்கிறீர்கள் என்கிறார். இதையடுத்து பேசும் பிரியங்கா, உன்னை அசிங்கப்படுத்திக்காத நிரூப், என்கிறார் பிரியங்கா. நான் அசிங்கப்படறனோ, நீ அசிங்கப்படரயோ, அதை நான் பார்த்துக்கிறேன் என்று நிரூப் சொல்ல, அப்ப நீ ஜெயிலுக்கு போ என்கிறார் பிரியங்கா. பின்னர் பிக்பாஸ் கொடுத்த தண்டனைபடி, ஜெயிலுக்கு செல்கிறார் நிரூப். அவருடன் சேர்ந்து பாவனி இருக்கிறார். கடைசியாக நிரூப் மற்றும் பாவனி ஜெயிலில் இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது.

Related Posts

Leave a Comment