சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

by Column Editor

பிரித்தானியாவில் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணிச்சுமை உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி 58 பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் ஓய்வூதிய வருமானத்தை 35 விகிதமாக குறைக்கப்போவதாக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஒன்றியம் அறிவித்தது.

இந்நிலையில் அதனை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பணிச்சுமை மற்றும் ஊதியம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்த வேலைநிறுத்தங்கள் மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் மாணவர்களின் கற்றலுக்கு இடையூறு ஏற்படும் என்பதனால் இது முற்றிலும் நியாயமற்றது என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment