பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஏழ்மையான நாடுகளுக்கு உதவ பிரித்தானியா உறுதி

by Column Editor

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு உதவ 290 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது.

கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற உச்சிமாநாடு இரண்டாவது வாரமாக இடம்பெற்றுவரும் நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏழை நாடுகளை எப்படி ஆதரிப்பது மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கல் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் காலநிலை நடவடிக்கைகளில் திட்டமிடுவதற்கும் முதலீடு செய்வதற்கும், பாதுகாப்பை அதிகரிக்கவும் குறைந்த கார்பன் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பணத்தை வழங்கவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படுவதைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேநேரம் இதுவரை காலநிலை மாற்றத்தால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இழப்பீட்டை நன்கொடையாக வழங்க ஸ்கொட்லாந்து மட்டுமே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment