ருவாண்டாவையடுத்து ஈராக்குக்கு நாடு கடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

by Lifestyle Editor

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில், ஈராக் நாட்டுக்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக, வெளியான சில ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம்.

ஆனால், ஈராக் நாட்டுக்கு, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவார்கள்.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

புகலிடக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள், ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்களே தவிர, அவர்களால் மீண்டும் பிரித்தானியாவுக்குள் வரமுடியாது.

பிரித்தானியாவில் வாழும் கனவில் வருவோர், ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாழும் நிலையே இறுதியில் கடைசியில் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment