பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா!

by Lifestyle Editor

பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரேன் தாக்குதல் நடத்தினால் பிரித்தானியா பாரிய விளைவுகளை சந்திக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவை தாக்க, பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு உரிமை உண்டு என, கடந்த வாரம் பிரித்தானிய அமைச்சர் வெளிவிவகார டேவிட் கேமரூன் கூறியிருந்தார்.

இதனையடுத்தே, பிரித்தானிய மீது தாக்குதல் உறுதி என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.

மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்திற்கு, பிரித்தானிய தூதர் நைஜல் கேசி அழைக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

தூதர் நைஜல் கேசியின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரித்தானியா, ரஷ்ய அதிகாரிகளுடன் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்களை மட்டுமே நைஜல் கேசி முன்னெடுத்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் தொலை தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தாது என்ற நிலைப்பாட்டுக்கு எதிராக பிரித்தானியா செயல்படுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுடன் பிரித்தானியாவும் தற்போது போரில் களமிறங்கியுள்ளதை பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் உறுதி செய்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் கூறிய கருத்துகள் இந்த போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகவே கருதப்படும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment