236
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
கடந்த சில நாட்களாக சீரியல் குறித்து சில விஷயங்கள் பேசப்பட்டது. இதில் வெண்பாவாக நடித்த பரீனாவிற்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
அடுத்ததாக கண்ணம்மா வேடத்தில் நடித்துவந்த ரோஷினி தொடரில் இருந்து விலக வினுஷா என்பவர் அவரது வேடத்தில் புதியதாக நடிக்க வந்தார். அவரை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.
அடுத்தபடியாக தொடரின் விறுவிறுப்பான கதைக்களம் குறித்து பேசி வந்த மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.
அதாவது கர்ப்பமாக இருந்த அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்றைய நிகழ்ச்சியில் காட்டப்பட இருக்கிறதாம்.
அந்த காட்சிகளின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.