289
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தான் மாநாடு. இப்படம் வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகின்றது.
சுமார் 900 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் மாநாடு டைம் லூப் என்ற ஜானர் படம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் படி தான் படத்தை எடுத்துள்ளதாக வெங்கட்பிரபு கூறியுள்ளார்.
இப்படத்தின் முன்பதிவு தமிழகத்தில் பல திரையரங்குகளில் தொடங்கிவிட்டது, தொடங்கியது அனைத்து தியேட்டர்களிலும் காலை காட்சி ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம்.
மாநாடு கண்டிப்பாக தமிழகத்தில் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி வரை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.