கமலுக்கு கொரோனா… பிக்பாஸில் தொகுப்பாளராக என்ட்ரி கொடுக்கும் ஸ்ருதி ஹாசன்!?

by Column Editor

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

நேற்று நடிகர் கமல்ஹாசன் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தனது சொந்த ஆடை நிறுவன அறிமுகத்திற்காக அமெரிக்கா சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பியபின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என்று தெரிவித்திருந்தார். மல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அவருக்கு மாற்றாக வேறொருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் திரும்பும் வரை தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

தெலுங்கு பிக்பாஸில் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்த போது அவர் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்ற போது அவரது மருமகளான நடிகை சமந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment