94
விஜய் தொலைக்காட்சியில் இளம் நடிகர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி.
தந்தையை இழந்த 4 மகள்கள் வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களையும் தாண்டி எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை நோக்கி கதை பயணித்து கொண்டிருக்கிறது.
இந்த தொடரின் மூலம் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை லட்சுமி ப்ரியா.
காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவருககு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் எந்த விஷயம் வந்தாலும் வைரலாகிவிடுகிறது.
தமிழில் மகாநதி தொடரில் நடித்துவந்த லட்சுமி ப்ரியா மலையாளத்திலும் Chandrakatham என்ற தொடரில் நடித்து வந்தார். தற்போது மலையாள தொடரில் இருந்து திடீரென லட்சுமி ப்ரியா வெளியேறியுள்ளார், ஆனால் காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை.