இரும்புச் சத்தை அள்ளித்தரும் முருங்கைக் கீரை சூப்…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் – 5

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 டம்ளர்

செய்முறை :

முதலில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து அதன் இலைகளை உருவி எடுத்து அதை தண்ணீர் விட்டு நன்றாக அலசி எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடாகிய பின்னர் அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

தண்ணீர் சூடானதும் ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை அதில் போட்டு கொதிக்க விடுங்கள்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் ஓரளவிற்கு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும் தீயைக் குறைத்து சுமார் 20 நிமிடங்கள் சமைக்கவும்.

நீங்கள் சேர்த்த 2 டம்ளர் தண்ணீர் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.

இது சூப் பதத்திற்கு மாறியவுடன் அடுப்பை அனைத்தால் இரும்பு சத்துக்களை அள்ளித்தரும் முருங்கை கீரை சூப் பரிமாற தயாராக இருக்கும்.

இந்த முருங்கை இலை சூப்பை கொஞ்சம் சூடாகவே அருந்துவது உடலுக்கு நல்லது. காரம் அதிகமாக வேண்டும் என்றால் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

Related Posts

Leave a Comment