208
பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கஷ்டங்களை பற்றி பேசும் தொடராக அமைந்துள்ளது. கதையில் அடுத்தடுத்து நிறைய அதிரடி கதைக்களம் அமைய இருக்கிறது.
பயந்து கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த கோபி இப்போது தைரியமாக அதை செய்ய ஆரம்பித்துள்ளார், எழிலுக்கு, அமிர்தாவுக்கு குழந்தை இருப்பது தெரிந்து அதிர்ச்சியாகிறார்.
கோபியின் அப்பா ஒருபக்கம் சொத்துக்களை மருமகள் மற்றும் பேரன், பேத்திகளுக்கு எழுதி வைக்க முடிவு செய்கிறார், இப்படி ஒவ்வொருவரின் விஷயங்களில் நிறைய நடக்கின்றன.இந்த தொடரில் முதலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் ஜெனிபர், இவர் கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் அவரது வீட்டில் மிகவும் சிம்பிளாக சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஜெனிபர் தனது கணவருடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.