ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்

by Column Editor

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் அண்டய நாடுகளில் வேகமெடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததும், விழிப்புணர்வு இல்லாதததுமே என சுகாதாரத்துறை எச்சரிக்கிறது,.

இதனிடையே, தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா மையம் கொண்டுள்ளது. ரஷ்யா, இங்கிலாந்து ஜெர்மன் ஆகிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மேலும், உருமாறிய டெல்டா வைரஸால் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. உக்ரைன், ஆஸ்திரியா, ரஷியா ஆகிய நாடுகளில் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு, டெல்டா வைரஸால் ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 40 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. ஒரே நாளில் ரஷ்யாவில் 1,237 பேர் இறந்துள்ளனர். கடந்த சில வாரங்களில் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment