‘ராதே ஷ்யாம்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்!

by Column Editor

‘ராதே ஷ்யாம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியா பிரம்மாண்ட படங்களில் ராதே ஷ்யாம் திரைப்படமும் ஒன்று. ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் தென்னிந்திய மொழிகளுக்கும் மிதூன் மற்றும் மனன் பரத்வாஜ் இருவர் இந்தி மொழிக்கும் இசையமைத்துள்ளனர். ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளுக்கு நாள் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. பிரபாஸின் பிறந்தநாளில் ராதே ஷியாம் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுளள்து. புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. நீருக்குள் பிரபாஸின் கார் செல்லுமாறு போஸ்டர் காணப்படுகிறது.

ராதே ஷ்யாம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment