‘கோர்ட்டில் சந்திக்கலாம்’.. கண்ணம்மாவிடம் சவால் விடும் பாரதி !

by Column Editor

பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்யவுள்ள நிலையில் கோர்ட்டில் சந்திக்கலாம் என்று சவால் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தனது இரண்டாவது குழந்தையை தேடி வந்த கண்ணம்மா, ஹேமாதான் அந்த இரண்டாவது குழந்தை என்று தெரிந்துக்கொண்டார். இதனால் ஹேமாவோடு நெருக்கமாக பழகி வருவது பாரதிக்கு பிடிக்கவில்லை. இப்படியே நிலைமை சென்றுக்கொண்டே இருந்தால் எங்கே ஹேமாவை கண்ணம்மா, தன்னிடம் இருந்து பிரித்து விடுவாள் என்று எண்ணிய பாரதி, கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்.

இதையடுத்து கண்ணம்மாவுக்கு பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார். இதை பார்த்த கண்ணம்மா அதிர்ச்சி அடைந்து கதறி அழுகிறார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் மனதை தேற்றிக்கொள்ளும் கண்ணம்மா, தனது மாமியார் சௌந்தர்யாவிடம் சென்று பாரதி விவாகரத்து நோட்டீஸ் விஷயத்தை போட்டு உடைகிறார். பாரதி என்னை விவாகரத்து செய்தால் ஹேமாவை இங்கே விடமாட்டேன் என்று அதிரடியாக கூறிவிட்டு செல்கிறார். மற்றொருபுறம் கண்டிப்பாக கண்ணம்மாவை விவாகரத்து செய்யப்போகிறேன். இந்த விஷயத்தில் கண்ணம்மாவிற்கு உதவி செய்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று தாய் சௌந்தர்யாவிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறார் பாரதி.

இப்படி கதையில் பல்வேறு திருப்பங்கள் சென்றுக்கொண்டிருக்கையில், புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாலையில் நடந்துச் சொல்லும் கண்ணம்மாவை பார்க்கும் பாரதி, உன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டேன். நீ கவலைப்படாதே, உனக்கு பெரிய தொகை ஒன்று ஜீவானம்சமாக கிடைக்கும் என்று பாரதி சொல்கிறார். அதற்கு கண்ணம்மாவோ, பணத்தை விட, வசதியை விட எனக்கு சுயமரியாதைதான் முக்கியம் என்று சொல்லும்போது, உனக்கு எப்படி சுயமரியாதை முக்கியமோ, அதைபோன்று எனக்கு முக்கியம், நாமே சட்டப்படி பிரியறதுதான் நம்ம சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான ஒரே வழி. கோர்ட்டல சந்திப்போம் என்று சவால் விட்டு பாரதி செல்லும் பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment