வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உதவி கரம் நீட்டிய பிக் பாஸ் புகழ் ஜூலி

by Column Editor

கடந்த 2017-ல் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு பிரபலமானவர் ஜூலியனா.

நிஜத்தில் செவிலியர் வேலை செய்யும் இவர் பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தபோது பிக் பாஸ் வீட்டில் நுழைந்து அதன்மூலம் எல்லாரும் அறியும் ஜூலியனவாக மாறினார்.

இதன்மூலம் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்த நிலையில் எதுவும் நீண்டகாலம் தொடரவில்லை.

இந்த நிலையில் ஜூலி modelling-ல் கால் பதித்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில் தான் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை, மழை பாதித்த பகுதிகளில் ஒன்றான சூளைமேடு கொளத்தூர் பகுதிகளில் நேரில் சென்று நிவாரண பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார் ஜூலியனா.

Related Posts

Leave a Comment