தோற்றுப்போயும் அடங்காத குணசேகரன்! தர்ஷினி விளையாட்டில் ஏற்பட்ட சிக்கல்

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தர்ஷினிக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் செய்து வைப்பதற்கு குணசேகரன் திட்டம் போட்ட நிலையில், வீட்டு பெண்கள் அனைவரும் அதனை தவிடுபொடியாக்கியுள்ளனர்.

ஜனனியின் தங்கைக்கும், சித்தார்த்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், தர்ஷினி ஜீவானந்தத்துடன் எஸ்கேப் ஆகினார்.

ஜீவானந்தம் தர்ஷினியை விளையாட வைத்து சாதனை செய்ய முயற்சித்து வரும் நிலையில், குணசேகரன் தோற்றுப்போனாலும் இன்னும் அடங்காமல் இருக்கின்றார். தர்ஷினி விளையாட்டில் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment