மட்டன் கறி தோசை…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

மட்டன் கொத்து கறி – 200 கிராம்

முட்டை – 3

தோசை மாவு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – 1

பழுத்த தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 3/4 ஸ்பூன்

மிளகு தூள் – 1 ஸ்பூன்

சோம்பு – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு பச்சை வாசம் போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிவிட்டுக்கொள்ளுங்கள்.

தக்காளி நன்கு மென்மையாக வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

மசாலாக்களின் பச்சை வாசம் போனவுடன் தண்ணிரில் அலசிய மட்டன் கீமாவை சேர்த்து நன்கு கிளறவும்.

தற்போது அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ளுங்கள்.

மட்டன் மசாலாக்களுடன் கலந்து நன்கு வெந்தவுடன் இறக்கினால் மட்டன் தோசைக்கு தேவையான கீமா மசாலா தயார்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றிக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் சிறிதளவு நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடாக்கிக்கொள்ளவும்.

தோசை கல் சூடானவுடன் தோசை மாவை எடுத்து ஊத்தப்பம் போல் ஊற்றிக்கொள்ளவும்.

தோசை ஓரளவு வெந்ததும் ஒரு கரண்டி கீமா கலவையை அதன் மேல் ஊற்றி பரப்பி விடவும்.

பின்பு எண்ணெயை அதன் மேல் சுற்றி ஊற்றி மிளகு தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.

தோசை நன்கு வெந்ததும் எடுத்தால் சுவையான மட்டன் கறி தோசை சாப்பிட ரெடி.

Related Posts

Leave a Comment