காளான் பக்கோடா ..

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

காளான் – 200 கிராம்.

கடலை மாவு – 1 கப்.

அரிசி மாவு – 1/4 கப்.

சோள மாவு – 1/4 கப்.

வெங்காயம் – 1.

பச்சை மிளகாய் விழுது – 1 ஸ்பூன்.

இஞ்சி_பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

முதலில், எடுத்துக்கொண்ட காளான், வெங்காயம் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், இதில் நறுக்கிய காளான் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு ஆகியவற்றை ஒரு சல்லடை கொண்டு சலித்து தூசி நீக்கி, பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் பேஸ்ட், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

இறுதியாக இதனுடன் வறுத்த காளான் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பதமாக பிசைந்துக் கொள்ள பக்கோடாவிற்கான மாவு தயார்.

தற்போது பக்கோடா சுட்டு எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் பக்கோடா மாவினை நன்கு உதிர்த்து சேர்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான காளான் பக்கோடா ரெடி.

Related Posts

Leave a Comment