தக்காளி தோசை

by Lifestyle Editor

தேவையான பொருட்கள்:
தக்காளி -5 (நன்கு பழுத்தது)
பச்சரிசி – 1கப்
புழுங்கல் அரிசி – 1கப்
உளுத்தம் பருப்பு – 1/2கப்
காய்ந்த மிளகாய் – 8
சோம்பு – 1ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இந்த தோசை செய்ய முதலில், பருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு அதை தண்ணீர் இல்லாமல் நன்கு வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கிரைண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி, உளுத்தம் பருப்பு, சோம்பு, காய்ந்த மிளகாய், தக்காளி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து தோசை பதத்திற்கு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுமார், 2 மணி நேரம் கழித்து எண்ணெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும். அவ்வளவு தான் இப்போது சத்தான மொறுமொறு தக்காளி தோசை ரெடி!!

Related Posts

Leave a Comment