அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..

by Editor News

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அவ்வபோது புதிய உச்சத்தை தொட்டுவருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

நேற்று ஏப்ரல் 29 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று ஏப்ரல் 30 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,529-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,232-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.87-க்கும் ஒரு கிலோ ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment