வாரத்தின் முதல் நாளிலேயே அதிகரித்த தங்கம் விலை !

by Lifestyle Editor

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இரக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.40,528க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து ரூ.5,006-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அன்று மாலையும் விலையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.40,688 க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,086 விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.74 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment