இன்று வெளியாகிறது டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி…

by Editor News

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அமெரிக்காவில் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முதலாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும். இதற்கான 15 பேர் கொண்ட அணியை இன்னும் இரு தினங்களுக்குள் 20 அணிகளும் ஐசிசிக்கு அறிவிக்கவேண்டும். இப்போது நியுசிலாந்து தங்கள் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று அகமதாபாத்தில் இந்திய அணியை முடிவு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் வீடியோ கான்பர்ன்ஸிங் மூலமாக கேப்டன் ரோஹித் ஷர்மா கலந்துகொள்கிறார். அதனால் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

Related Posts

Leave a Comment