மணக்கோலத்தில் தர்ஷினி! மண்டபத்திற்கு மாஸாக எண்ட்ரி கொடுத்த ஜனனி டீம்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

ஜனனி சித்தார்த்திற்கும், தனது தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வரும் நிலையில், குணசேகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

யாருக்கும் தெரியாமல் நடக்கும் திருமணத்திற்கு மாஸாக ஜனனி டீம் எண்டரி கொடுத்துள்ளது. மணக்கோலத்தில் தர்ஷினி அமர்ந்திருக்க திருமணம் நிறுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இடையில் ஆர்வமில்லாமல் சென்று கொண்டிருந்த குறித்த சீரியலில் தற்போதைய காட்சி மக்களை சற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment