ஆனந்த் விட்ட சவால்… மில்லுக்கு வேலைக்கு வந்த கார்த்திக்..

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ஒரு மாசம் மில்லில் வேலை பார்க்க சொல்ல, கார்த்திக் அந்த சவாலை ஏற்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து கார்த்தியை எப்படியாவது தோற்கடித்து சொத்தை பிரிக்க வேண்டும் என பிளான் போடுகின்றனர்.

மறுபக்கம் மீனாட்சி ஆனந்த் மீது பயங்கர கோபத்தில் இருக்க, அங்கு வந்த தீபா அவர்களை கூல் செய்து கார்த்திக் சார் எடுத்த முடிவை பற்றி சொல்கிறாள். பிறகு கார்த்திக் அங்கு வந்து ஒரு மாசம் மில்லில் வேலை பார்க்கப் போற விஷயத்தை சொல்ல, தீபா நீங்க எடுத்தது நல்ல முடிவு சார், அண்ணன் தம்பி உள்ளுக்குள்ள பிரிவும் வரக்கூடாது அதே சமயம் சொத்தும் பிரிய கூடாது என தீபா சொல்லிக் கொண்டிருக்க, அபிராமி பூஜை தட்டுடன் அங்கு வருகிறாள்.

அவளும் கார்த்திக்கிடம் நீ எடுத்தது நல்ல முடிவு, தீபா சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் ஒன்னா இருக்கணும், இந்த சொத்தும் பிரிய கூடாது என சொல்கிறாள். மேலும் கார்த்திக் கையில் ஒரு சாமி கயிற்றை கட்டிவிட்டு, இது உனக்கு துணையா இருக்கும் என சொல்கிறாள். அடுத்ததாக அருண் ஆனந்த் மில்லுக்கு வர, மேனேஜர் வந்து ரெண்டு மணி நேரமா மிஷின் போடல அதனால நாலு லட்சம் ரூபாய் லாஸ் என சொல்கிறார். மேடம் இன்ஜினியரை வர சொல்லி இருப்பதாக சொல்ல, தனியாக செல்லும் ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு யார் போன் பண்ணி கூப்பிட்டாலும் வரக்கூடாது என சொல்கிறான்.

கார்த்தி வந்த முதல் நாளே லாஸ் ஆன மாதிரி இருக்கணும் என பிளான் போடுகிறான். இந்த நிலையில் மில்லுக்கு கார்த்திக் வர மிஷின் ஓடாத விஷயம் அறிந்து அவனை மெஷினை ரிப்பேர் செய்கிறான். திடீரென மிஷின் ஓடும் சத்தம் கேட்டு அருண், ஆனந்த் வெளியே வர, மிஷினை ரெடி பண்ணது கார்த்திக் தான் என தெரிந்து ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க….

Related Posts

Leave a Comment