ரத்னாவை மிரட்டிய முத்துபாண்டி… அரிவாளுடன் ஆவேசமாக கிளம்பிய ஷண்முகம்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஷண்முகம் அல்வாவையும் மல்லிகைப்பூவையும் வாங்கி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் மல்லிகைப்பூவையும் அல்வாவையும் டேபிள் மீது வைக்க, சனியன் அதை அப்படி வைக்க கூடாது, நீங்க தான் உங்க பொண்டாட்டி தலையில் வைத்து விடணும் என்று சொல்ல, ஷண்முகம் வாங்குனது பத்தலையா என்று கேட்க, சனியன் நோட்ல அப்படி தான் இருக்கு என்று சொல்கிறான்.

பிறகு தங்கைகள் நீயும் அண்ணி வந்ததும் மத்தவங்களை மாதிரி என்னை மறந்துட்டல, அன்னிக்கு மட்டும் மல்லிப்பூ வாங்கி வந்திருக்க என்று சொல்ல, வைகுண்டமும் என்னப்பா இப்படி மாறிட்ட என்று கேட்க, ஷண்முகம் எனக்கு எப்பவும் என் தங்கச்சிங்க தான் பர்ஸ்ட், அப்புறம் தான் மத்தவங்க எல்லாரும் என்று மல்லிப்பூவை எடுத்து எல்லாருக்கும் வைத்து விடுகிறான், பரணிக்கும் வைத்து விடுகிறான்.

இதனையடுத்து இசக்கி பாக்கியம், கனி ரத்னா ஆகியோர் ஓரிடத்தில் சந்தித்து கொள்கின்றனர், அப்போது ரத்னாவுடன் வெங்கடேஷும் இருக்க, இசக்கி என்ன ஜோடியாக சுத்தறீங்க என்று கலாய்க்க, முத்துப்பாண்டி அங்கு வந்து விடுகிறான். வெங்கடேஷை பார்த்து என்னடா அவகூட சுத்திட்டு இருக்க, புடிச்சு உள்ள போட்டுடுவேன் என்று மிரட்டுகிறான்.

வெங்கடேஷ் முதல் முறையாக நான் கட்டிக்க போற பொண்ணு கூட நான் இருக்கேன், உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று எதிர்த்து பேச, பாக்கியம் பிரச்னையை தடுக்க, வெங்கடேஷை அனுப்பி வைக்க, முத்துப்பாண்டி இந்த கல்யாணம் நடக்காது, எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று மிரட்ட, ரத்னா கண்ணீருடன் வீட்டிற்கு வருகிறாள். ரத்னாவும் கனியும் அழுவதை பார்த்து பரணி என்னாச்சு என்று கேட்க, நடந்தவற்றை சொல்லி அண்ணனுக்கு தெரிந்தா பிரச்சனையாகிடும் என்று சொல்ல, பரணி அவனுக்கு தெரியணும் என்று சொல்கிறாள்.

பிறகு ஷண்முகம் ப்ரியாணியோடு வீட்டிற்கு வர, எல்லாரும் டல்லாக இருக்க, ஷண்முகம் என்னாச்சு என்று கேட்க, பரணி நடந்ததை சொல்ல அரிவாளுடன் கிளம்புகிறான். பரணி அவனை தடுத்து நிறுத்தி இப்படி எல்லாத்துக்கும் அரிவாளை தூக்குறத விடு, கொஞ்சம் அறிவா யோசி என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment