முடிவுக்கு வந்தது சன் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்..

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான்.

31 வருடத்திற்கு முன் தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளனர். டிவி ஆரம்பித்த நாள் முதல் இவர்களின் டிஆர்பி எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கிறது.

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை தொடர்ந்து நிறைய வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகும்.

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தொடர் முடிவுக்கு வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் அன்பே வா.

2024 ஜனவரி மாதம் வரை 1000 எபிசோடுகளை எட்டியுள்ள தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். அண்மையில் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் இன்னும் நிறைய எபிசோடுகள் கொண்டு போகலாமே என தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment