கோடைக்காலத்தில் பிரசவம் ஆன பெண்களின் ஆரோக்கியத்துக்கு 5 குறிப்புகள்..!

by Lifestyle Editor

கோடை வெப்பத்தை சமாளிக்க இளந்தாய்மார்கள் என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

இளந்தாய்மார்களின் உணவு முறை எப்படி இருக்க வேண்டும்?​

பிரசவம் முடிந்த உடன் சோர்வை அதிகமாக உணர்வீர்கள். இதனால் உணவை தவிர்க்க விரும்புவீர்கள். எக்காரணம் கொண்டும் இதை செய்ய கூடாது. ஏனெனில் பிரசவம் முடிந்த பிறகு உடல் மாறிவிட்டது. உடலில் இருக்கும் அத்தியாவசிய கூறுகளை மீட்டெடுக்க ஊட்டச்சத்து உணவு அவசியம். இழந்த ஊட்டச்சத்தை மீட்டெடுக்க உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

இரும்புச்சத்து, வைட்டமின்கள், ஒமேகா 3 போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ள வேண்டும். பழங்கள், கொட்டைகள், காய்கறிகள், கீரைகள் என சமச்சீரான உணவை எடுத்துகொள்வது பயனளிக்கும். நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் என்ன, தவிர்க்க வேண்டியது என்ன என்பதை நிபுணருடன் திட்டமிட்டு எடுத்துகொள்ளுங்கள்.

இளந்தாய்மார்கள் நீரேற்றமாக இருப்பது அவசியம் ஏன்?​

கோடைகாலத்தில் உடல் அத்தியாவசிய உப்புகள் மற்றும் தாதுக்களுடன் கணிசமான அளவு திரவங்களும் இழக்கின்றன. புதிய அம்மாவாக நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நிலையில் இருக்கும் போது நீரிழப்பு இன்னும் வேகமாக இருக்கும். அதனால் சராசரியாக ஒருவர் குடிக்கும் தண்ணீரை விட கூடுதலாக குடிக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு நீரேற்றமும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

பழச்சாறுகள், மோர் போன்ற திரவ ஆகாரங்கள் நீருடன் சேர்த்து எடுக்க வேண்டும். மேலும் நீரேற்றமாக இருப்பது வைட்டமின் சி அளவையும் தாது உட்கொள்ளலையும் அதிகரிக்கும்.

பிரசவத்துக்கு பிறகு அது கோடைக்காலமாக இருந்தால் தோல் உணர்திறன் கொண்ட பெண்களாக இருந்தால் சரும பாதுகாப்பு மிக்வும் முக்கியம். இது தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற நோய்த்தொற்றுகளை உண்டு செய்யாது.

வெயிலில் செல்வதற்கு முன் என்று இல்லை வீட்டில் இருந்தாலும் வெயில் தாக்கம் வரவே செய்யும். அதனால் சன்ஸ்க்ரீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டாம். இது சருமத்தை கருமையாக்க செய்யும். அதனால் சரும பாதுகாப்புக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.

​கோடைக்காலத்தில் பிரசவம் ஆன பெண்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம்​ :

கர்ப்பம்.. பிரசவம் என்று உடல் பல மாற்றங்களை சந்தித்திருக்கும். பிரசவ நேரத்தில் கடினமான உழைப்பு தேவைப்பட்டிருக்கலாம். இதனால் உடல் ஆற்றலை இழந்திருக்கும். ஊட்டச்சத்து, ஆற்றல் இழப்பு என்று உடல் சோர்வை கொண்டிருக்கும் நிலையில் அதை ஈடு செய்ய பிரசவக்காலத்துக்கு பிறகு ஓய்வு அவசியம். ஓய்வு எடுக்க எடுக்க உடல் இழந்த ஆற்றலை திரும்ப பெறும். கோடையில் இயல்பாகவே குறையும் ஆற்றல் மீண்டும் பெறுவதற்கு இந்த ஓய்வு மிகவும் அவசியமாகும். குழந்தை தூங்கும் போதெல்லாம் இளந்தாய்மார்களும் தூங்கி ஓய்வு எடுப்பது உடல் ஆற்றலை இழக்காமல் பாதுகாக்க செய்யும்.

கோடையில் உடல் சுகாதாரம் தொற்றை தவிர்க்க செய்யும்​ :

பிரசவித்த பிறகு உடல் சோர்வால், உடல் ஆரோக்க்கிய குறைபாட்டால் குளியலை தவிர்க்க செய்வதுண்டு. ஆனால் பிரசவம் முடிந்த பிறகு எதிர்ப்பு சக்தி குறைபாடாக இருப்பதால் தொற்று வேகமாக பரவும் அபாயம் உண்டு. சுகாதார குறைபாடு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். தினமும் குளிக்க வேண்டும். முடிந்தால் இரண்டு வேளை குளியலை மேற்கொள்ளலாம். பிரசவத்துக்கு பிறகு நாப்கின் பயன்பாடு இருக்கும் வரை கூடுதல் சுகாதாரம் அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் நாப்கின் மாற்றாத போது அவை அரிப்பு, தடிப்பு போன்றவற்றையும் உண்டு செய்யலாம்.

Related Posts

Leave a Comment