கோவக்காய் கிரேவி..

by Editor News

தேவையான பொருட்கள் :

கோவக்காய்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்

மிளகு தூள் – 1/2 ஸ்பூன்

கடலை மாவு – 2 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

சீரகம் – 1 ஸ்பூன்

கசூரி மேத்தி – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய கோவக்காயை சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கி தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தததும் சீரகம் சேர்த்து கொள்ளவும்.

சீரகம் பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் கடலை மாவு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கசூரி மேத்தி மற்றும் தேவையான அளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனதும் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

இவை நன்றாக கொதித்ததும் குழம்பில் வதக்கி வைத்துள்ள கோவக்காயை சேர்த்து 10 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

இறுதியாக இதில் மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவக்காய் கிரேவி சாப்பிட ரெடி.

Related Posts

Leave a Comment